ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய ஆரி, ஐஸ்வர்யா தத்தா

உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஆரி கிறிஸ்துமஸ் விழாவை ஆசிரமக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரம குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சான்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர்.
Powered by Blogger.