புத்தாண்டில் சிறப்பு விருந்தளிக்கும் கடாரம் கொண்டான் படக்குழு

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஜனவரிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாக இருப்பதாகவும், அத்துடன் மற்றொரு சிறப்பு அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KadaramKondan #ChiyaanVikram

No comments

Powered by Blogger.