தர்மபிரபு படத்தில் யோகி பாபுவின் புதிய அவதாரம்

தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக மாறியிருக்கிறார் யோகி பாபு.
அவர் தற்போது `தர்மபிரபு' என்கிற படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய பணியையும் யோகி பாபு மேற்கொள்கிறார். அதாவது முதன்முறையாக படத்தின் வசனங்களை யோகி பாபு எழுதுகிறார்.
விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படம் தவிர்த்து `கூர்கா', `ஜாம்பி' உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அஜித்தின் `விஸ்வாசம்', சிம்பு நடிக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜீவாவின் `கொரில்லா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். 

No comments

Powered by Blogger.