போட்டியில் ஜெயிப்பது திரிஷாவா, சமந்தாவா?

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு வாங்கி இருக்கிறார். முதலில் நானி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்போது சர்வானந்த் நடிக்கிறார். இவர் எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தில் நடித்தவர். 
தமிழில் திரிஷா நடித்த வேடத்தில் மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க இயக்குனர் பிரேம் குமார் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜுவோ திரிஷாவை விட சமந்தாவுக்கு மார்க்கெட் அதிகம் எனவே சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று கூறுகிறாராம். இந்த படத்தை கைப்பற்றுவது யார் என்பதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.