ரொறன்ரோ டொன் றிவர் காட்டுப் பகுதியில் பெண்ணின் சடலம்!

ரொறன்ரோ டொன் றிவர் காட்டுப் பகுதியில் நேற்று மீட்கப்பட்ட சடலம், ஞாயிற்றுக்கிழமை இரவு காணாமல் போன
பெண்ணினுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காட்டுப் பகுதியில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் யாருடையது என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது காணாமல் போன ஸ்டெல்லா வோங் என்பவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான ஸ்டெல்லா வோங் என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியிலிருந்து காணாமல் போயுள்ள நிலையில், இறுதியாக அவர் க்ரோதர்ஸ் வூட்ஸ் டிரெயில் பகுதி ரயில் பாதை அருகே காணப்பட்டதாக கூறப்படுகிறது.
Powered by Blogger.