யாழில் குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுப்பு

 நத்தார் தினத்தன்று குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் மணியம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசன் குலேன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள குளத்தில், நேற்று மாலை நீராடச் சென்றவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது நீடாடச்சென்றவர் வீடு திரும்பாதமையால் அவரது உறவுகள் தேடியபோதே, குளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை கண்டெடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.