சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை!

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்பது சாத்தியப்படாத கோரிக்கையாகும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட திகாம்பரம், இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு 1000 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை, ஆறுமுகன் தொண்டமான் பொய்யுரைக்கின்றார் என திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும், மலையக தோட்ட தொழிலார்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Powered by Blogger.