ஜேர்மன் தமிழ்த்தேசிய அமைப்பும், தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்களும் தமிழ் உறவுகள் நிதி பங்களிப்பில் நிவாரண உதவி!

நேற்றைய வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து கிளி கரைச்சிப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உருத்திரபுரம்
சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில்  வசிக்கும் நூற்று முப்பத்தேழு  குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்கள் ஜேர்மன் தமிழ்த்தேசிய அமைப்புக்களும் தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்களும் தமிழ் உறவுகளும் இணைந்து வழங்கிய நிதியின் ஊடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்   மனிதாபிமானப்பிரிவினால்  வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி பணியினை  முன்னணியின் உருத்திரபுர மனிதாபிமானப்பிரிவுச்செயற்பாட்டாளர் முபிள்யான் ஒழுங்குபடுத்த முன்னணியின் கிளிநொச்சி உதவி  அமைப்பாளர் விமலாதரன் நெறிப்படுத்தினார்.
நன்றி ஜேர்மன் வாழ் உறவுகளே!
உதவி வழங்கலுக்கான விபரங்களை சரியான முறையில் ஒழுங்குபடுத்திய சிவநகர் மற்றும் உருத்திரபுரம் கிராமசேவகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


No comments

Powered by Blogger.