மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் பம்பலப்பிட்டியில் உள்ள அரச மாடி
வீட்டுத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக மூடப்பட்டு கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
அந்த வீட்டில் வசித்து வந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நீதவான் விசாரணைகளையடுத்து பொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.