பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் மதுபான சாலை

பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த மதுபான சாலை கடந்த 7 வருட காலமாக அனுமதிப்பத்திரமின்றி இன்றி இயங்கி வருவதாகவும் , அதனால் பாடசாலை மாணவர்கள், வணக்கஸ்தலங்களுக்கு வழிபாட்டுக்கு வருவோர் அனா பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் , குறித்த மதுபான சாலைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளமையால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் , தமது கோரிக்கையினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலரான ஆ. ஸ்ரீயிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

No comments

Powered by Blogger.