லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணிகள்:

மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச
செயலர் பிரிவில் உள்ள கல்லாறு பகுதி மக்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிவாரணக் குழுவினர் கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் வைத்து பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கிளிநொச்சி மக்களுக்கான ஒருதொகை நிவாரணப் பொருட்கள் மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.