கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பாராம்!

மழை, வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேரில் சந்திப்பார்
என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலையில் கண்டாவளை மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று (வியாழக்கிழமை) நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்த பின்னர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலை குறித்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்விற்கு திருப்பும் வகையில் அப்பகுதிகளை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றார்.
அதன்படி, அவர் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுவார்” எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.