கோப்பாய் வெளியில் இடம்பெற்ற விபத்தில் காயப்பட்டஇளைஞன் உயிரிழப்பு

வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர்
ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோப்பாய்வெளி ஊடாக கைதடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை அவ்வழியே வேகமாக சென்ற மோட்டார் கார் மோட்டார் பின்னால் மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மோதிய மோட்டார் கார் அருகே உள்ள நீரேரிக்குள் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொடிகாமம் கச்சாய் பகுதியை சேர்ந்த கந்தசாமி கருணாகரன்(வயது-30)என்பவராவார்.
இவ்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர் மோட்டார் காரினை செலுத்தி சென்ற நபரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் நிறைமதுபோதையில் காணப்பட்டதாகவும் திருகோணமலையில் உள்ள பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-பாறுக் ஷிஹான்-

No comments

Powered by Blogger.