மனிதா விழித்திடும் கணம்..!

சிந்தை கெடுக்கும் சினம்
சீறிப்பாயுது தினம்
சிதறியே போகுது உளம்
சீராய் வாழ்வதே நலம்

பாடாய் படுத்துது மனம்
பாவியாய் போனதே இனம்
பாசத்தை மறந்து அறம்
பாவங்கள் செய்யுது மலம்

உள் நிலை செலும் முகம்
ஊற்றம் நடிக்குது தினம்
உலகில் இதுவே நிஜம்
உணர்ந்தால் உனக்கு ஜெயம்

மனதை வெருட்டுது பயம்
மயங்கிப் போகுது சுயம்
மண்ணில் உள்ளது உரம்
மனிதா விழித்திடு கணம்

No comments

Powered by Blogger.