ஒரு வறிய குடும்பத்தின் அவல நிலை!

"என்னிடம் ஒரு துவிச்சக்கர வண்டி இருந்திருப்பின் என் மகனை வைத்தியசாலைக்கு அழைத்து
சென்றிருப்பேன்...பஸ்ஸிற்கு 150/= வேண்டும்....எங்கு செல்வது நான்...?" என்று அவர் உருகிய போது அந்த இடத்தில் நின்ற அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது....
         முத்தையன்கட்டு ஜீவநகர்ப் பகுதிக்கு வெள்ள நிவாரணம் அளிக்கச் சென்றபோது தான்..."அன்ரனிதாஸ்" இன் குடும்பத்தை ...அவர் நிலையை நேரில் பார்வையிட்டோம்....
          அன்றாடம் தேங்காய் பிடுங்கி ஜீவிக்கும் இவர் 10km இற்கும் அதிகதூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் ....காலையில் வேலைக்குப் போன அப்பா மாலை வரும்வரை மனைவியும் பிள்ளைகளும் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது...

       தன்னிடம் ஒரு துவிச்சக்கரவண்டி இருப்பின் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அது கடவுள் கொடுத்த வரமாக அமையும் என அவர்கள் கூறியபோது...அவர்களை அப்பிடியே கைவிட்டு விட இதயம் இடங்கொடுக்கவில்லை....
       அன்பானவர்களே சமூக வலைத்தளங்களை சரியாகப் பயன்படுத்த நல்ல சந்தர்ப்பம்....
      இப்பதிவைக் கடக்க முன் நிச்சயம் ஒரு Share செய்யுங்கள்...அவர்களுக்கு வாழ்வு கொடுத்த புண்ணியம் நிச்சயம் கிடைக்கும்.....
     ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகள் இல்லாமல் சிதைந்து போயுள்ள கிராமத்தில் வாழும் இவர்களும் எமது உறவுகளே..
      கரம் கொடுப்போம் வாரீர்...
     நன்றியுடன்.....
         சூ.ஜெயகிருஷ்ணா
          077 56 11 320
               @உதவும் கரங்கள்
                   தேடல் அமையம்

No comments

Powered by Blogger.