கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் பாதுகாப்புப் படையினர்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் இன்று (வியாழக்கிழமை) படையினரும், கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய முப்படையினரும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்வேறு உதவிகளை முன்னெடுத்துவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.