சூர்யா படத்துக்கு ரசிகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு!

நடிகர் சூர்யா, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே ’ மற்றும் கே.வி.ஆனந்தின்
பெயரிடப் படாத படத்திலும் நடித்து வந்தார். இதில் கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படம் சூர்யாவின் 37வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படதத்ன் கதாநாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார்.
மேலும் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா, இயக்குனர் சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 37’ என்றே அழைக்கிறார்கள் படக்குழுவினர்.
இந்நிலையில், இயக்குனர் கே.வி. ஆனந்த், ‘மீட்பான், காப்பான், உயிர்கா’ ஆகிய மூன்று பெயர்களில் சிறந்த ஒரு தலைப்பை சூர்யா படத்துக்கு தேர்ந்தெடுங்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதில் பெரும்பாலானோர் ‘உயிர்கா’ என்ற தலைப்பையே தேர்ந்தெடுத்துள்ளனர். ‘உயிர்கா’ என்றால் ஆபத்திலிருந்து காப்பவன் எனப் பொருள். ஆதலால் ரசிகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பையே சூர்யா & கே.வி.ஆனந்த் படத்துக்கு தலைப்பாக வைக்கலாம் என தெரிகிறது.

No comments

Powered by Blogger.