கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோரினார்- சபாநாயகர்

எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்­சவை அறி­வித்­த­மைக்­காக சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய, கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நேரில் சந்­தித்து மன்­னிப்­புக் கோரி­யுள்­ளார்.


நாடா­ளு­மன்­றத்­தில் கடந்த வாரம் எதிர்க்­கட்­சித் தலை­வர் தொடர்­பான குழப்­பம் இடம்­பெற்­றது.
எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்­சவை கடந்த 18ஆம் திகதி சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்­தார். இதற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருந்­தன.
கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் கடந்த 19ஆம் திகதி புதன்­கி­ழமை, எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு வழங்­கி­யமை சட்­டத்­துக்கு முர­ணா­னது என்­றும், பெரும்­பான்­மை­வா­தச் சிந்­த­னை­யின் வெளிப்­பாடு என்­றும் கடு­மை­யா­கச் சாடி­யி­ருந்­தார்.
இந்த நிலை­யில் கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை, சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைச் சந்­தித்­துப் பேசு­வ­தற்கு விருப்­பம் வெளி­யிட்­டி­ருந்­தார். அதற்கு அமை­வாக, சபா­நா­ய­க­ரின் அறை­யில் சந்­திப்பு இடம்­பெற்­றது.
மகிந்த ராஜ­பக்­சவை அவ­ச­ரப்­பட்டு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக அறி­வித்­தமை தவறு. அதற்­காக மன்­னிப்­புக் கோரு­கின்­றேன். உங்­க­ளு­டன் (கூட்­ட­மைப்­பு­டன்) கலந்­து­ரை­யா­டா­மல் அறி­வித்­த­மைக்­காக மன்­னிப்­புக் கோரு­கின்­றேன். நான் இந்­தப் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்­டு­மா­னால் அதற்­கும் தயா­ராக இருக்­கின்­றேன் என்று சபா­நா­ய­கர் இந்­தச் சந்­திப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சீ.யோகேஸ்­வ­ரன், நாடா­ளு­மன்­றச் சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமை­வா­கச் செயற்­ப­டு­மாறு சபா­நா­ய­க­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.
இந்­தச் சந்­திப்பு சுமார் 30 நிமி­டங்­கள் நீடித்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

No comments

Powered by Blogger.