சாவகச்சேரி நகரசபை தென்னிலங்கையின் பின்னனியில் இயங்கிறது.

சாவகச்சேரி பஸ் தரிப்பிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள  லவ்லி கூல் பார், தாய் வீடு பத்திரிகை
நிறுவனத்தின் விளம்பர பலகைகளுக்கு எதுவித அனுமதியும் பெறவும் இல்லை, கட்டணமும் கட்டப்படவில்லை. அத்துடன் மேற்படி விளம்பரங்களை அகற்றுமாறு செயலாளரால் தவிசாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டும் அகற்ற முடியாது என தவிசாளர் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சிங்கர் நிறுவனத்தால் போடப்பட்ட விளம்பரத்திற்கான கட்டணமாக ரூபா. 179000.00 2015 ஆம் ஆண்டு அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நேற்றைய (27/12)தினம் உறுப்பினர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது இன்று மாலை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக செயலாளர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் (28/12) இன்னமும் அகற்றப்படவில்லை. செயலாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது  உதவிதவிசாளர் ( Balamayuran Balu)  தன்னை செயற்பட விடாமல் தடுப்பதாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் போகின்றது நகர சபை. அதாவது இன்று ஒன்று தெளிவாக விளங்குவது தாம் தென்னிலங்கையின் பின்னனியில் நகர சபையின் நிர்வாகத்தையும் நகர சபையையும் தாமே அராஜகமாக இயக்க வெளிக்கிடுகிறார்கள் என்பது. செயலாளரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.