இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம், சட்டவாட்சியை
ஸ்தீரப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு தயாராக உள்ளதென அதன் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லன்ட்  தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“ஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினால்தான் இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வை முன்வைக்க முடிந்தது.
அந்தவகையில் இலங்கையை இவ்விடயத்தில் வரவேற்பதுடன் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் சமரசம் உள்ளிட்ட விடயங்களுக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு தயாராக உள்ளது.
இதனால் இலங்கையுடன் நீண்டகால புரிந்துணர்வு, நல்லுணர்வை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என பட்ரீசியா ஸ்கொட்லன்ட்  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.