672 இடங்­க­ளில் டெங்­கு அபாயம்!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை எல்­லைப் பரப்­புக்­குள் தற்­போது நில­வும் டெங்­குத் தாக்­கத்தை அடுத்து யாழ்ப்­பா­ணம்
பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வில் நேற்­றை­ய­தி­னம் 947 இடங்­க­ளில் மேற்­கொண்ட சோத­னை­யில் 672 இடங்­க­ளில் டெங்­குக்கு ஏது­வான சூழலே காணப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் பிர­தேச செய­ல­கத்­தி­னர், டெங்­குக் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வி­னர், சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­ னர், பொலி­சார், பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் இணைந்து இந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­ னர்.
நேற்று ஒரே­நா­ளில் 947 இடங்­கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. அவற்­றில் 672 இடங்­க­ளில் டெங்கு பெரு­கு­வ­தற்கு ஏது­வான சூழல் இருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
இதை­ய­டுத்து அத்­த­கைய இடங்­களை உடன் துப்­பு­ரவு செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டது. 25 இடங்­க­ளில் நுளம்­புக் குடம்­பி­கள் காணப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து 17 பேருக்கு எதி­ராக வழக்­குத் தொட­ரப்­பட்­டது. இந்த நட­வ­டிக்­கை­கள் இன்­றும் தொட­ர­வுள்­ளன.

No comments

Powered by Blogger.