முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுதிரும்ப ஆரம்பித்துள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சிலர்
தத்தமது வீடுகளுக்கு தற்காலிகமாக சென்றுவருகின்றனர்.
குறித்த மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சீரான வானிலை நிலவி வருவதால் வெள்ள நீர் வடிந்துவருகின்றது.
எனவே  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் சிலர் தமது வீடுகளுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.
எனினும் மக்கள் குடியிருப்புகள் தொடர்ந்தும் சேறும் சகதியுமாக காணப்படுவதுடன், வீடுகளில் கசிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக சில பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடிய பின்னரும் மக்கள் தமது வீடுகளுக்கு மீள செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் சுமார் 120ற்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு தற்காலிகமாக வீடுகளில் சென்று தங்கமுடியாத நிலையில், பாரதி வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
அவர்களின் வீடுகள் வெள்ளத்தினால் சேதமாகியுள்ளதால், அங்கு சிறுவர்கள், குழந்தைகள் என பல்வேறு வயது தரப்பினரும் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமக்கான வீடு உட்பட நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை குறித்த பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.