தமிழகத்தில் தாழ்ந்தாலும், கர்நாடகத்தில் தலை நிமிர்ந்த விவேகம்..!

தமிழகத்தில் அஜித்தின் ‘விவேகம்’ தல தாழ்ந்தாலும், கர்நாடகத்தில் ‘விவேகம்’ தல நிமிர்த்தி வெற்றிபெற்றுள்ளது.

தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார்.
படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்தள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் அஜித் படம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் ஒரு தீபாவளி போல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். 
அஜித் படத்திற்கு ஓபனிங்க் சூப்பராக இருக்கும். அதே போல அஜித்தின் படத்தை கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக வெளியான ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படம் கன்னடத்திலும் டப் செய்து வெளியிட்டனர்.
அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தும் இப்படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

No comments

Powered by Blogger.