சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இருவரை உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.