கனடா பூர்வக்குடியினருக்கான இந்திய வம்சாவளி பெண்ணின் கைங்கரியம்!

கனடாவில் வாழும் பூர்வக்குடியினருக்கான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆற்றிய கைங்கரியம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.


அந்த மக்களின் உணவுப் பிரச்சினை உலகறிந்த விடயம் என்பதுடன் அவர்களுக்கு தன்னாலான உதவிகளை வழங்க முடியும் என்ற எண்ணத்துடன் அன்டி ஷர்மா (Andi Sharma) என்ற பெண் விமானத்தில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

தனது விமானி உரிமத்தை பெற்ற உடனேயே பூர்வக்குடியினருக்காக ஏதாவது உதவிசெய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவர்களுக்காக தொன் கணக்கில் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல தயாராகியுள்ளார்.

வின்னிபெக் (Winnipeg)ஐச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனடி ஷர்மா, மனிடோபாவின் வடக்கு பகுதியில் வாழும் பூர்வக்குடியினருக்காக ஒரு பெரிய மாற்றத்தை செய்ய முடிவு செய்துள்ளார்.

விமானம் ஒன்றில் முதல்கட்டமாக 160 கிலோகிராம் உணவுப்பொருட்களுடன் மனிடோபாவின் வடக்கு பகுதிக்கு பறக்க முடிவு செய்துள்ளார். கடந்த பல வருடங்களாக அன்டி ஷர்மா உலக உணவுப் பிரச்சினை தொடர்பான தொண்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில் தனது விமானி உரிமத்தை பெற்றுக் கொண்ட அவர், களத்தில் இறங்கிப் பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.