யாழில் இளம் சமூகத்தினரிற்கான இராணுவத்தின் பரிசுகளாக மதுபானங்கள்!

இளம் சமூதாயத்தை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகள் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரால் தொடரப்பட்டு வருகிறது.


அவ்வகையில் யாழ்.கோட்டை பண்ணைப்பகுதியில் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க ராகம்’ எனும் நிகழ்வில் இளம் சமூகத்தினரிற்கான பரிசுகளாக மதுபானங்கள் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.காட்சிக்கூடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மதுபான போத்தல்கள் மீது அங்கு வைக்கப்பட்டுள்ள வளையங்களை இலக்கு வைத்து எறிவதன் மூலம் பரிசில்களை பெற்றுக்கொள்ளும் போட்டியே இனப்படுகொலை சிங்கள படையினரால் நடத்தப்படுகின்றது.

பியர் போத்தல்கள , டின்கள் மீது எவரும் வளையங்களை வீசி ஏறிந்து பரிசுகளை வெல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதிகளில் நடத்தப்படுகின்ற இனப்படுகொலை சிங்கள படையினரது களியாட்ட விழாக்களில் மது போத்தல்களினை இளம் சமூகத்திடையே இலவசமாக அள்ளிவீசுவது படையினரது வழமையாகும்.


இலங்கையின் கூடிய மதுபாவனை மிக்க மாவட்ட என்று யாழ்ப்பாணம் சொல்லப்படுவது இன்றய காலத்தில் அறிய முடிகின்றது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.