வடக்கு யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்!

வடக்கு யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.


ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ மேற்குப்பகுதியில் உள்ள Driftwood அவென்யூ பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் குறித்த இடத்தில் பல துப்பாக்கிச் சன்னங்கள் இருந்ததாக தெரிவித்த பொலிஸார் சிவப்பு நிற Honda Civic வாகனத்தை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வாகனத்தை ஜேன் வீதியில் பார்த்ததாகவும் பொலிஸாருக்கு சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.