மதுப்பாவனைக்கு எதிரான பெண்களின் கோரிக்கை.





மதுப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


“சமூகத்தில் பெண்களின் பங்கேற்பு“ எனும் தலைப்பிலான கருத்தரங்கு வடமாராட்சி கிழக்கு உடுத்துறையில் நேற்று நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட பெண்கள் தமது சிறுவர்களை எதிர்காலத்தில் மதுப் பாவனையில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு இந்தக் கிராமத்தில் மதுப்பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வடமாராட்சி கிழக்கு பிரஜைகள் குழு தலைவர் சி.த.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார, வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசு தாசன், யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்பம், பிரதேச சபை உறுப்பினர் வி.றஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில், வடமாராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கருத்தரங்கு நடைபெற்றது.

தற்போது,  மதுப்பாவனையானது   வடபகுதியில் பிரசித்தமானதாக  உள்ளது  என்பதுடன்  அது ஊக்குவிக்கப்படுவதும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.