விடுதலைப்புலிகள் ஜனநாயக அரசியலை விரும்பவில்லை




தமிழ் அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தினையும் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதையும் விடுதலைப்புலிகள் விரும்பவில்லை என  சுமந்திரன் எம். பி தெரிவித்துள்ளாா்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடபட்டவா்கள் படுகொலை செய்யப்பட்டனா் ,   தமிழ்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னரே  தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் சம்மதித்தனா்.

ஜனநாயக அரசியலை முன்னெடுத்தவா்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் சந்தித்ததினாலேயே ஜனநாயக அரசியலுக்கு விடுதலைப்புலிகளால் அனுமதி கொடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளாா்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா்கள் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில்வைத்து முன்னாள் வடமாகாணசமை உறுப்பினா் கே. சயநட்தன் கூறிய கருத்து தொடா்பாக கேட்டபோதே அவா் இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.