சீனர்கள் இலங்கையின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்

இலங்கையிலுள்ள சீன தளங்களில் உள்ளூர் சட்டங்கள் மீறப்படும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையிலுள்ள சீனர்கள் உள்ளூர் சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மெட்ரோ கொழும்பு திண்ம கழிவு முகாமைத்துவ திட்ட பெயர்ப் பலகையில் சீன மொழி உள்ளடக்கப்பட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சீன தளங்களில் உள்ளூர் மொழிச் சட்டங்கள் மீறப்படுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மெட்ரோ கொழும்பு திண்ம கழிவு முகாமைத்துவ திட்ட பெயர்ப் பலகை குறித்து தமது அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெயர்ப் பலகைகளில்; இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொழிகள் நிராகரிக்கப்பட்டு, சீன மொழி உள்ளடக்கப்படுவது குறித்து தொடர்ந்து தமக்கு முறைபாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.