அரசியல்வாதிகளே பிரிவினைக்கு காரணம்

நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர் என்றும், சில அரசியல்வாதிகளே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அமைச்சின் ஊடாக இன்று சுமார் 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) குறித்த பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது, வடக்கு மக்களுக்கு தெற்கு மக்களும் தெற்கு மக்களுக்கு வடக்கு மக்களும் நிவாரணங்களை அனுப்புகின்றனர். ஆகவே மக்கள் மத்தியில் எவ்வித பிரிவினைகளும் இல்லையென திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.
ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை முன்வைத்து பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனை தவிர்த்து அனைவரும் இணைந்து மனித நேயத்துடன் செயற்பட்டால் நாட்டை முன்னேற்றலாம் என அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.