1,099 ஏக்கர் விவசாய பண்ணைகளை விடுவிக்கும் இராணுவம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் பண்ணைகளாக இயங்கிய 1,099 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவம்
அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை விடுவிக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக இந்த விடுவிப்பு பணிகள் இடம்பெறுவதாக இராணுவம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான 479 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில்  வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 120 ஏக்கர் காணியும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான 500 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் வடக்கு ஆளுனர் தலைமையில் நடக்கும் நிகழ்வுகளில், இதற்கான ஆவணங்கள் வழங்கப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.