தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

அட்டன் டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தற்காலிகமாக
கூடாரங்கள் அமைக்கும் பணிகள் இன்று (31) இடம்பெற்று வருகின்றன.
போடைஸ் தோட்ட பொது மைதானத்தில் இந்த கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர், விமான படையினர், பொலிஸ் அதிகாரிகள், தோட்ட பொது மக்கள் என பலரும் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்காலிகமாக கூடாரங்களை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகமும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் 5 இலட்சம் ரூபா பெறுமதியில் தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தற்காலிக மலசலகூடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.