பதவியைப் பெறுவதற்கு இனவாதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது

பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஆயுதமாக இனவாதத்தைப் பயன்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் காலகாலமாக அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் இருந்து வரும் இனவாத அரசியல்போக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.ஓர் இனத்துக்காக குரல் கொடுப்போரையும் இனவாதம் பேசுவோரையும் மக்கள் தெளிவாக அடையாளங் கண்டு கொண்டு அவர்களை நிராகரிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை நாம் நின்று நிதானித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இனவாத செயற்பாடுகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வழமைபோன்று எதிர்வருகின்ற காலங்களிலும் முன்னெடுக்கப்படலாம்.

கடந்த காலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை நாம் நின்று நிதானித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இனவாத செயற்பாடுகளில் புதிய யுக்திகளை கையாண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வழமைபோன்று எதிர்வருகின்ற காலங்களிலும் முன்னெடுக்கப்படலாம்” என அவர் மேலும் குறிப்பிட்டடுள்ளார்.

No comments

Powered by Blogger.