ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் நட்டாங்கண்டலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 மாணவ,பெண் குடும்பத்திற்கு5000/- ரூபா வீதம் நிதியுதவி!

இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் பிரதேசத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30
மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் தெரிவு செய்யப்பட்ட ( அதிகஸ்ர ) பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 7 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5000/- ரூபா வீதம் நிதியுதவியும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது .

மேற்படி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இந்த  நிகழ்வில் பிரதேச செயலாளர் , கிராம அலுவலர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
Proud to A.C.S.C
(avarankaal center sports club)
ஆவரங்கால்

No comments

Powered by Blogger.