இளமகளீர் கிறிஸ்தவ சங்க கட்டடத் திறப்பு விழா

இளமகளீர்  கிறிஸ்தவ சங்க  கட்டடத் திறப்பு விழா  (வை.டபிள்யூ.சி.ஏ ) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள  நிலையத்தில் அண்மையில்  தலைவி திருமதி  சேர்ச்சிலம்மா நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்றது


 யாழ்.மாநாரசபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டித் திறந்து வைத்ததுடன் சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன் மங்களவிளக்கேற்றி சிறப்பித்தார் .

இந்நிகழ்வில் பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் """வில்லில்லா வில் ""  என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு மற்றும் நிகழ்வுகளும்  இடம்பெற்றன .

இந்நிகழ்வு குறித்து சங்கத்தின் தலைவி திருமதி  சேர்ச்சிலம்மா நவரட்ணராஜா  குறிப்பிடுகையில்  இச் சங்கம் தனியே பெண்களுக்காக உருவாக்கப்பட்டது.(Y w c a ) ஆண்களுக்கு வை.எம்.சி.ஏ போன்று இது பெண்களுக்கானது. இச் சங்கம் குறித்து பலருக்கு அறிதலை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. இங்கு பெண்களுக்கான தையல் வகுப்புக்கள்.  சனி ஞாயிறு தினங்களில் ஆங்கிலம் சிங்கள மொழி  வகுப்புக்கள் . வாழைநார்  துணிப்பை தயாரிப்பு மற்றும் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சிகள் என்பன வாழ்வாதரத்தினை அடிப்படை யாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறிப்பாக சமூக பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கல்வி கலை ஆகியவற்றினை முன்னிலைப்படுத்தியுள்ளோம். எம்முடைய இத்தகைய பணிகளை கருத்தில் கொண்டு பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை நாம் கோரியபோது  எமது பணிக்காக தனது நிதியிலிருந்து  (500 000 )ஐந்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கித் தருவதாக யாழ் மாநகரமுதல்வரும் பிரதமஅதிதியுமான இம்மானுவேல் ஆணோல்ட் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

 அவரது நிதிப்பங்களிப்புடன் எமது கட்டடத்தின் சில பகுதியான கலந்துரையாடல் மண்டபம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றையும் வாடகைக்கு வழங்கவுள்ளோம்.

எனவே எமது நிலையம்  பிரதான வீதியில் இல 161 இல் (ஈசன்ஸ் கடை முன்னால் ) இல் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதிகளையும் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது.  எனவே 0763944442 இலக்கத்தினூடாக எப்போதும் எமது சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

தொகுப்பு
யாழ்.தர்மினி பத்மநாதன்

No comments

Powered by Blogger.