இந்தியாவிற்கு வர போகும் மிக பெரிய ஆபத்து?

இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித், பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த சி.பி. ராஜேந்திரன் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த நிலநடுக்கத்தினால் பேராபத்து நிகழலாம் என தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக புவியியல் வல்லுநர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் ரிக்டர் அளவில் 8.5 அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக்கோளும் ஆய்வு நடத்தி இதனை உண்மை என ஆமோதித்துள்ளன.மேலும், இந்த நிலநடுக்கத்தால் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.