சுவிஸ் வங்கியில் கருப்பு பணம்.!

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட தற்போதைய காலகட்டத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் தெரிவித்தன. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தொடக்கி, இந்திய அரசியல் பெரும் புள்ளிகள், தொழிலதிபர்கள் வரை சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிகளவில் பணம் சேமித்து வைத்துள்ளனர்.


இந்தியாவில் சாதாரண குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை அவரவர் வருமானத்தை பொறுத்து இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி வரி கட்டாமல் வைத்துள்ள பணம் கருப்பு பணமாகும். இந்த கருப்பு பணத்தை மீட்க இந்திய பிரதமர் கடந்த காலத்தில் தனி குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு வெளிநாடுகளில் பதுக்கிவைத்து இருக்கும் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதாக வாக்குஉறுதி அளித்தார்.
ஆனால் அந்த குழு சரியாக செயல்படுவதாக தெரியவில்லை. இதனையடுத்து, இந்திய அரசு, ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் பட்டியலை வெளியிட ஸ்விஸ் வங்கி சம்மதம் தெரிவித்தது.

மேலும், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியர்கள் அவர்களது பணத்தை தங்கள் வங்கியில் பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது உடன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், இரண்டு இந்திய நிறுவனங்களின் வங்கி கணக்குகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த ஜியோடெஸிக் மற்றும் ஆதி எண்டர்ப்ரைசஸ்நிறுவனங்கள் கருப்பு பண பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களில் ஆதி எண்டர்ப்ரைசஸ் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. இந்நிறுவனம் ரியல் எஸ்டேட், உள்ளிட்ட பல தொழில்களில் செய்துவருவதாக தெரிகிறது. மேலும், இந்நிறுவனத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றோரு இந்திய நிறுவனமான ஜியோடெஸிக் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ்குமார், மேலாண் இயக்குனர் கிரண் குல்கர்னி, இயக்குனர் பிரசாந்த் ஆகிய மூன்று பேருடைய சுவிஸ் வங்கி கணக்கில் பணம் பதுக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.