உங்களுக்கு லைக்கா கார் லைக்கா பெற்றோல் லைக்கா றோட் தெரியுமா??


சிலரிடம் என் இப்படி அநாவசிய செலவு செய்கிறாய் என்று கேட்டால் உடனே அவர்கள் “மை கார் மை பெற்றோல் மை றோட்” என்பார்கள்.
இதற்கு நல்ல உதாரணம் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி. அவர் மற்றவர்கள் சிரிப்பார்களே என்ற கவலை கொஞ்சமும் இன்றி தன் விருப்பம்போல் நடிகைகளுடன் ஆடிப் பாடி விளம்பரம் செய்கிறார்.
அவருக்கு அதரவாக பேசவும் நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சரவணா ஸ்டோர் முதலாளி புயலுக்கு ஒரு கோடி ரூபா கொடுத்ததை பெருமையாக கூறுவார்கள்.
ஆனால் இவர்கள் யாருமே சரவணா ஸ்டோர் முதலாளி அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை சித்திரவதை செய்வது பற்றியோ அவர்களை சுரண்டுவது பற்றியோ பேச மாட்டார்கள்.
அதுபோல நம்மட லைக்கா முதலாளியும் இது “லைக்கா கார், லைக்கா பெற்றோல், லைக்கா றோட்” என்ற ரீதியில் செலவு செய்வதை நியாயப்படுத்தவும் நம்மிடையே நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் லைக்கா முதலாளிக்கு ரஜனிக்கு நிகராக கட்அவுட் வைக்கிறார்கள். ரசிகர் மன்றம்கூட ஆரம்பித்து விடுவார்கள் போல் இருக்கிறது.
லைக்கா முதலாளியும் சரவணா ஸ்டோர் முதலாளி போன்றே தனது கம்பனியில் பணி புரியும் தொழிலாளர்களை சித்திரவதை செய்கிறார். சுரண்டுகிறார்.
இதுகுறித்து அந்த நாலு பேர் கொஞ்சம்கூட கவலைப்படுவதும் இல்லை. அக்கறை கொள்வதும் இல்லை.
இங்கு எமது கவலை என்னவெனில்; இந்த முதலாளிகளைப் பார்த்து மற்றவர்களும் சமூக அக்கறை யற்று செயற்பட முனைவார்களே என்பதுதான்.
-தோ.பாலா-
Powered by Blogger.