காலநிலை மாற்றம்: இந்துமத வேதங்களில் குறிப்பு!

காலநிலை மாற்றத்திற்கான உந்துகோல் இந்துமத வேதங்களில் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவின் தலைநகரமான பியூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது ஐநா பொதுச்செயலாளரான அந்தோனியோ கட்ரஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, காலநிலை மாற்றம் பற்றியும், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் ஆதரவு பற்றியும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தனது வலுவான அர்ப்பணிப்புக்கான உந்துகோல் பழைய இந்துமத வேதங்களில் இருப்பதாக அந்தோனியோவிடம் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தியதற்காக நரேந்திர மோடிக்கு அந்தோனியோ கட்ரஸ் நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு டிசம்பர் 3ஆம் தேதியன்று போலந்தில் அந்தோனியோ கட்ரஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிறிஸ்தவ மதத்தில் மட்டும் காலநிலை மாற்றத்தை பற்றி கூறப்படவில்லை. அண்மையில் இந்திய பிரதமரான நரேந்திர மோடியுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மோடியின் அர்ப்பணிப்புக்கு என்ன காரணம் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு இந்து மதத்தின் அடித்தளமான வேதப் புத்தகங்கள்தான் காரணம் என்று அவர் கூறினார். ஆக, எல்லா மதங்களிலும் காலநிலை மாற்றத்தை பற்றி கூறப்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.