மாற்று திறனாளிப் பெண்கள் மீது பாலியல் வன்முறை!

மேற்கு வங்கத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர் என்று புகார் அளித்துள்ளதாக அந்த மாநிலத்தில் செயல்படும் சுருதி மாற்றுத் திறனாளி மையம் தெரிவித்துள்ளது அந்த
மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சுருதி மாற்றுத் திறனாளி மையம் என்ற அரசு சாரா அமைப்பு மாற்றுத்திறனாளி பெண்கள் மத்தியில் செயல்பட்டு வருகிறது.நேற்று அந்த மாநிலத்தில் சர்வதேசமாற்றுத் திறனாளிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். அந்தப்புகாரில், மேற்கு வங்கத்தில் கடந்த 2012லிருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்கள் குறிப்பாக பார்வை இழந்த பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18 வரை 35 மாற்றுத் திறனாளிப் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடந்துள்ளது.கடந்த நவம்பரில் மட்டும் நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன என்றும் அந்தப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுருதி மாற்றுத் திறனாளி மையத்தின் இயக்குநர் சாம்பா சென்குப்தா நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016ன்படி, மாற்றுத் திறனாளிப் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினால் அது கொடுந் தாக்குதலாக கருதப்பட்டு மிக அதிகமான தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.