நோர்வே வாழ் உறவால் முன்னாள் போராளி மரணச்செலவுக்கு உதவிக்கரம்

தேற்றாதீவில் நேற்று மரணமானவரின் இறப்பு எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 5 பிள்ளைகளின் தந்தையான இவர் வறுமை காரணமாக துவிச்சக்கர வண்டியில் வடை விற்று தன் குடும்பத்தை நடாத்தி வந்திருந்தார்.
தனக்கு அடிக்கடி வரும் வலிப்பு நோய்காரணமாக கடந்த 25 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்ச்சி செய்து காப்பாற்றப்பட்டு இறக்கும் வரை கோமாவில் இருந்துள்ளார்.
இவரின் இழப்பு இக் குடும்பத்திற்க்கு ஈடுசெய்ய முடியாதது. ஏற்க்கனவே வறுமையில் இருந்த இக்குடுமபத்தின் நிலை இவரின் மறைவால் இன்னும் துன்பங்களை சுமக்கவேண்டி வந்துள்ளது.
இவ் விடயத்தை எமது முகநூல் மூலமாக பார்வையிட்ட நோர்வேயில் வசிக்கும் கமல் அண்ணா உடனேயே 30 000/=ரூபா பணத்தை இறுதிக்கிரியைச் சிலவுக்காக எமக்கு அனுப்பி வைத்தார். இன்று காலைஅன்னாரின் மகளிடம் பணத்தை வழங்கியதோடு இறுதி அஞ்சலியையும் செலுத்தினோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு இவ் உதவியை செய்த #கமல் அண்ணாக்கும் எமது நன்றிகள்.
[நன்றி நோர்வே பரணி அண்ணாக்கு இவ் உதவியை ஒருகிணைத்து தந்தமை]

No comments

Powered by Blogger.