ஹுட்லர், முசோலினி வரிசையில் மைத்திரி - மஹிந்த

நாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. தற்போது நாடு எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதை
ஜனாதிபதி ஒருபோதும் அறியமாட்டார். எனவே மக்களானையினை மதிப்பவராயின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை இவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.மேலும் பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி ஆகியோர் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாகவே  தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

பின்னர்  அதிகார  பேராசையில்  பாராளுமன்றத்திற்கும்,  நீதித்துறைக்கும்  எதிராக செயற்பட்டு உலக மகா யுத்தத்தினை தோற்றுவித்தனர். இந்த  சூழ்நிலைகளையே தற்போது மைத்திரி- மஹிந்த கூட்டணி பின்பற்றி வருகின்றது எனவும் இதன்போது தெரிவித்தார். அலரி  மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(இராஜதுரை ஹஷான்)
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Maithiri #Mahinda #Hedller #Munsolini #Harsana-Rajakaruna

No comments

Powered by Blogger.