பாஜக எம்.பி. ராஜினாமா

நாட்டுக்குத் தேவை இப்போது சிலையோ, கோயில்களோ அல்ல அரசியல் சாசனம்தான். அதைப்
பாதுகாக்க போராடப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறவர் சாவித்ரி பாய் புலே. இவர் பாஜகவின் எதிர்க்கட்சியல்ல. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பஹ்ரைச் தொகுதியில் பாஜகவின் எம்.பி. தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, போராடப் போவதாக இன்று டிசம்பர் 6 ஆம்தேதி அறிவித்திருக்கிறார் சாவித்ரி பாய் புலே.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று லக்னோவில் நமோ புதய் சேவா சமிதி என்ற அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக எம்பி, மத்திய அரசு, பாஜக அரசு மீது கடுமையான பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கியிருக்கிறார்.
“பாஜக பிரித்தாளும் கொள்கையைக் கடைபிடிக்கிறது. அரசியல் சாசனத்தை சீர் குலைத்து இடஒதுக்கீட்டை முடிவுக்குக்கொண்டுவரத் துடிக்கிறது. தலித் மக்கள், சிறுபான்மையினரின் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறது பாஜக. அம்பேதகர் இயற்றிய அரசியல் சாசனத்தை முடக்குவதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக இந்து,. தேசம், தேசபக்தி, பாகிஸ்தான், பசு, அயோத்தி என்று பேசிக் கொண்டிருக்கிறது. அதனலதான் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” என்று கூறியிருக்கிற சாவித்ரி,
வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கக் கோரி பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.