அருள்நிதிக்கு கிடைத்த ஜோடி

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் பிரியா பவானி சங்கர் தற்போது இணைந்துள்ளார்.
மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜ சேகர் இயக்கும் புதிய படம் நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. தற்போது இதன் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இதில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்தார். இரு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது பிரியா பவானி சங்கர் படக்குழுவுடன் இணைந்துள்ளதோடு அவர் முதன்முறையாக அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். மஞ்சிமா, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் உள்ளிட்டப் படங்களில் நடித்துவருகிறார். அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. திரைக்கதையில் இரு ஜோடிகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தைத் தவிர ஜீவா ரெக்க படத்தின் இயக்குநர் ரத்ன சிவா இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 5) தொடங்கியுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சதிஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். ஜீவா நடிப்பில் தற்போது கீ, கொரில்லா, ஜிப்ஸி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்குத் தயாராகிவருகின்றன
Powered by Blogger.