மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இணைந்த முன்னணி நடிகர்!

பிடித்த நடிகர்களின் படங்களை தீவிரமாக பார்க்கும் ரசிகர்கள் மத்தியில், இந்த இயக்குநரின் படம் என்பதற்காகவே படம் பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத் தகுந்த இயக்குநர்களுள் ஒருவர் மணி ரத்னம்.


சமீபத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதற்கடுத்து 'பொன்னியின் செல்வன்' நூலை மையமாக வைத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது அவரது நெடுங்கால ஆசை எனவும் சொல்லப்பட்டது.

இதில் விஜய், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இயக்குநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணி ரத்னமும் விக்ரமும் ஏற்கனவே 'ராவணன்' படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.