யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் வாகனங்கள் தீக்கிரை

இனந்தெரியாத நபர்களால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில்
பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.


கோப்பாய் மத்திய கல்வியியற் கல்லூரி ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (7) இரவு நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது படுகாயமடைந்த செல்லத்துரைசெல்வரஞ்சன்(வயது-53) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வான் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும்
தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.