முன்னாள் போராளிகள் மீது உதவித்திட்டங்களில் இருந்து புறக்கணிப்பு

அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளின் மாற்றுத்திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், “இவ்வருட ஆரம்பத்திலிருந்து நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களுடன் இரண்டு தடவைகளுக்கு மேற்பட்ட   கலந்துரையாடல்களில் நாம் ஈடுபட்டோம்.

இதன்போது எங்களின் தேவைகள் தொடர்பாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால்  இன்று வரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.

நானாட்டான் பிரதேசத்தில் மாத்திரம் 60 இற்கும் மேற்பட்ட ஆண்- பெண் முன்னாள் போராளிகளும் 15 இற்கும் மேற்பட்ட அவயங்களை இழந்தவர்களும் வாழ்ந்து வருகின்றோம்.

இந்நிலையில் கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எமக்கு தேவைகளை பூர்த்திசெய்து கொடுப்பதற்கு நானாட்டான் பிரதேசச் செயலகம் தவறிவிட்டது.

இதேவேளை அண்மையில் வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் ஆகியவற்றைக் கூட எங்களுக்கு அதிகாரிகள் வழங்கவில்லை.

அந்தவகையில்  பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்பரெலியா திட்டத்தில் கூட உதவித்திட்டங்கள் எதுவும்  வழங்கப்படாது  தாம்   ஒதுக்கப்பட்டுள்ளோம்” என முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.