லைகா- சன் பிக்சர்ஸ் மோதல்

லைகா நிறுவனத்திற்கும், சன் பிக்சர்ஸுக்கும் நடுவே ஏதோ ஒரு மனக்குமைச்சல் இருந்து வருகிறது. இருவருக்குமே ரஜினி படங்கள் கையில்
இருப்பதால், அதை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மாறி மாறி ரசிகர்களுக்கு பப்பர மிட்டாய் வழங்கி வருவது நல்ல விஷயம்தான். ஆனால் 2.0 படத்தின் கலெக்ஷனை எடுக்க வேண்டும் என்றால், இன்னும் மூன்று மாதங்களுக்கு ரஜினியின் அடுத்த படம் திரைக்கு வராமலிருந்தால்தான் முடியும். தியேட்டர் தவிர்த்த மற்ற மற்ற ஏரியாக்களில் அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

அப்படியொரு நல்ல விஷயம் நடந்துவிடக் கூடாது என்ற ஒரே முடிவால்தான் "பேட்ட" படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறதாம் சன் பிக்சர்ஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள அடுத்த படத்தை யார் த்யாரிக்கப்போவது என்பதிலும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. இரு நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போட்டியால் ரஜினியின் இமேஜ் டேமேஜ் ஆகி வருகிறது.

No comments

Powered by Blogger.