ஒடியன்’ படத்தின் தணிக்கை குழு தகவல் வெளியானது

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘ஒடியன்’ திரைப்படத்தின் தரச்சான்றிதழ் விபரத்தை தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது.


இப்படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்களாக உள்ளது.

இப்படம் கேரளா, தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

மோகன்லாலுடன் பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். ஜெயச்சந்திரன், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷாஜிகுமார் ஒளிப்பதிவும், ஜான்குட்டி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.